செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

கலைத் திருவிழா 2025-26.....

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (19.08.2025) பள்ளி அளவிலான கலைத் திருவிழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் செ.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் சோ. சிவகுருநாதன் அனைவரையும் வரவேற்றார். உதவி ஆசிரியர்கள் மா. யோகலட்சுமி, மு. அனிதா, கணினி பயிற்றுநர் ச. மரகதம், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் க. புவனேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பெ. மகாலட்சுமி, மணிகண்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் பள்ளிகளில், மாணவர்களின் தனித் திறமைகளைக் கண்டறிந்து அதை மேம்படுத்தவே கலைத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன எனக் கூறி இதில் வெற்றி பெறும் மாணவர்கள் அரசு செலவில் வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் உள்ளிட்ட பல பரிசுகளும், பாராட்டும் பெறலாம் எனக்கூறி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். பின்னர் மாணவர்கள் பல்வேறு வகையான போட்டிகள் மூலம் தமது தனித் திறன்களை வெளிப்படுத்தினர். தொடர்ந்து கண்ணைக் கவரும் பல வண்ண உடைகளில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அனைத்து நிலை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியில் உதவி ஆசிரியர் கோ. ஆனந்தன் அனைவருக்கும் நன்றி கூறினார். உதவி ஆசிரியர் பூ. இராம்குமார் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.